மைதானத்தில் கண்கலங்கி நின்ற குப்தில், ரோஸ் டெய்லர்!

Thursday, March 17th, 2016

டி20 உலகக்கிண்ண தொடரில் நேற்று நடந்தப் போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் குப்தில், ரோஸ் டெய்லர் கண்கலங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

நேற்று நாக்பூரில் நடந்த முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதியது.

அப்போது கடந்த 3ம் திகதி புற்று நோயால் மரணமடைந்த முன்னாள் நியூசிலாந்து அணித்தலைவர் மார்ட்டின் குரோவ்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நியூசிலாந்து வீரர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

இந்நிலையில் மார்ட்டின் குரோவ்க்கு அஞ்சலி செலுத்தும் போது நியூசிலாந்து வீரர்கள் குப்தில், ரோஸ் டெய்லர் இருவரும் கண்கலங்கி நின்றனர்.

இவர்கள் இருவரும் மார்ட்டின் குரோவ்க்கு மிகவும் பிடித்த வீரர்கள். ஒரு பேட்டியில் கூட மார்ட்டின் குரோவ், ‘குப்தில், ரோஸ் டெய்லரை தன் குழந்தைகள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மார்ட்டின் குரோவ் பற்றி டெய்லர் கூறுகையில், ”மார்ட்டின் குரோவின் ஊக்கம் தான் எனது பல சிறப்பான இன்னிங்ஸ்களுக்கு காரணமாக இருந்தது.

அவரது வழிகாட்டுதல் மட்டும் இல்லை என்றால் நான் ஒன்றுமே இல்லை” என்று உருக்கமாக கூறியுள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106