யாழ்ப்பாணத்தில் சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி வைக்க பேரணி!
Thursday, June 30th, 2016
யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பேரணி இன்று(30) காலை யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னால் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னால் ஆரம்பமாகியுள்ள இந்த பேரணி இறுதியாக யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நிறைவடையவுள்ளது.
இந்த பேரணியில் மாணவர்கள், பொது மக்கள், பொலிஸார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். சித்திரவதையினால் பாதிக்கப்ட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் தினமான யூன் 26 ஆம் திகதியை நினைவு கூரும் முகமாக இந்த பேரணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Related posts:
உலகளாவிய நிலையான அபிவிருத்தி சுட்டெண்ணில் இலங்கைக்கு 2 ஆவது இடம்!
சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்தியாவில் "வீதி நிகழ்ச்சிகள்" – இன்றுமுதல் 30 ஆம் திகதிவரை...
துறைமுக நகரத்தில் செயற்படும் வர்த்தக நிறுவனங்களின் ஒப்பந்தம் தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தை நான்க...
|
|
|


