குடாநாட்டில் உருளைக் கிழங்கு செய்கைக்கு தயாராகும் விவசாயிகள்!
Friday, December 14th, 2018
யாழ். குடாநாட்டில் செய்கையாளர்கள் காலபோக உருளைக்கிழங்கு செய்கையில் ஈடுபடுவதற்குத் தயாராகி வருகின்றனர்.
கமநல சேவைகள் நிலையம் ஊடாக செய்கையாளர்களுக்கு விதை கிழங்குகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த வாரங்களில் மேலும் ஒரு தொகுதி விதை உருளைக்கிழங்குகள் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளன.
ஏற்கனவே வழங்கப்பட்ட விதை கிழங்குகளில் முளை திறன் காணப்படாததினால் அவற்றை நடுகை செய்வதில் தாமதம் ஏற்படுவதாக செய்கையாளர்கள் தெரிவித்தனர்.
என்றாலும் இந்த விதைக் கிழங்குகளை நடுகை செய்யும் பணிகள் இந்த வாரத்தில் ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக செய்கையாளர்கள் தெரிவித்தனர்.
Related posts:
ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி மன்ற திருத்த சட்டமூலம் சமர்ப்பிப்பு!
திருட்டில் ஈடுபட்ட சிறுவனுக்கு யாழ். நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு!
துருக்கி ஜனாதிபதி எர்டோகனை சந்தித்தார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன !
|
|
|


