ஜனாதிபதி தலைமையில்  விசேட சந்திப்பு!

Monday, December 10th, 2018

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

இன்று காலை பத்து மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்கு முன்னர் பொதுஜன முன்னணியுடன் இணைந்து செயற்படும் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இதன் பின்னர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள அவர்கள், உயர்நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அதன் பின்னர் தேர்தல் ஒன்று நடைபெறுமாயின் அது குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் பொதுஜன முன்னணிக்கு ஆதரவான கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106