அமரர் சிறி ஐயாவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இதய அஞ்சலிகள்!
Sunday, December 9th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிரமான ஆதரவாளரும் பிரபல வர்த்தகருமான மரியாதைக்குரிய கோவிந்தராஜா ஶ்ரீஸ்கந்தராஜா அவர்கள் இன்று (09.12.2018)கொழும்பில் காலமானார்.
சிறி ஐயா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த துயரத்துடன் அவருக்கு எமது இதய அஞ்சலிகளை செலுத்துகின்றோம். அவரது இழப்பால் துயரம் சுமந்து தவிக்கும் அவரது மனைவி , பிள்ளைகள், உறவினர்கள் ,நன்பர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாமும் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.
நல்லூர் கோவில் வீதியில் வசித்துவந்த சிறி ஐயா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட அன்னாரின் புகழுடல் கொழும்பிலிருந்து நாளை காலை அவரின் யாழ்ப்பாண இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இறுதிக்கிரியைகள் தொடர்பான அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.



Related posts:
வறிய குடும்பத்திற்கு ஈ.பி.டி.பி கட்சியினால் வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு!
அரசியல் உரிமை பேசி தேர்தலில் வென்றவர்கள் என்றுமே மக்களை திரும்பி பார்த்தது கிடையாது – ஈ.பி.டி.பி.யின...
இழப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆவணங்களை உறுதிப்படுத்த தவறாது கலந்து கெள்ளுங்கள் – அமைச்சரின் இணைப...
|
|
|
யாழ் மாநகர நிதிக்குழு விவகாரம்: ஏனைய குழுக்களிலிருந்தும் வெளியேறும் நிலை உருவாகும் - ஈ.பி.டி.பியின் ...
தூரநோக்கற்ற ஏமாற்றும் திட்டங்களை மக்களிடம் திணிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரும்புவதில்லை - ஈ.பி....
ஈபிடிபி தமிழ் மக்களின் நலன்சார்ந்தே முடிவுகளை எடுக்கும் - எவரது முகவர்களாகவும் செயற்படாது – கட்சியின...


