கட்டணம் குறைப்பது தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை!

Wednesday, December 5th, 2018

பேருந்து கட்டணம் குறைப்பது தொடர்பில் இன்று(05) பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

பேருந்துகள் சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் இடையில் இன்று(05) காலை 10 மணியளவில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை சீர்திருத்தத்திற்கு அமைய டீசலின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டது. இதன்காரணமாக பேருந்து கட்டணங்களும் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


சீனாவின் ‘சினோவக்’தடுப்பூசியை இலங்கை கூட்டாக தயாரிக்க உலக சுகாதார நிறுவனம் ஒப்பதல் - இன்றைய சர்வதேச...
அரச உத்தியோகத்தர்கள் வேலை செய்யாதபோது பொதுமக்கள் அரசியல்வாதிகளை குற்றம் சுமத்துகின்றனர் அமைச்சர் பிர...
நவீனமயமாக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் ஒக்டோபர் மாதம்முதல் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் - அமைச்சர் கல...