நுகர்வோர் அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்!
Tuesday, December 4th, 2018
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சில அதிகாரிகள் கேகாலை மாவட்டத்தில் விற்பனை நிலையங்களை பரிசோதனை செய்த வேளை அவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த அதிகாரசபையின் அதிகாரிகள் இன்று(04) தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த அதிகாரசபையின் அனைத்து விசாரணை அதிகாரிகளும் இன்று(04) சுற்றிவளைப்புகள் மற்றும் துறைசார் பணிகளிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பண்டிகை காலத்தில் இவ்வாறு சுற்றிவளைப்புகளில் இருந்து விலகுதல், நுகர்வோரான மக்களுக்கு பாதகமான சூழல் என அகில இலங்கை நுகர்வோர் அதிகாரசபை விசாரணை அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் லங்கா திக்கும்புர குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அரச அதிகாரிகளுக்கு சலுகை அடிப்படையில் வாகன அனுமதி!
பொலிஸாரிடம் சொல்லாதீர்கள் - மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!
கால அவகாசம் நீடிக்கப்படாது - OL பரீட்சை விண்ணப்பிக்கும் காலம் நாளையுடன் நிறைவு!
|
|
|


