கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட இளம் குடும்பஸ்தர் மரணம்!
Saturday, December 1st, 2018
கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி சரிந்து மரணமடைந்ததாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை வல்வெட்டித்துறைப் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆதிகோவிலடி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சாமுவேல் திருக்குமரன் (வயது 34) மயங்கி சரிந்து மரணமடைந்தார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று சென்று சடலத்தை பார்வையிட்ட பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
Related posts:
ஆவாக்குழு தலைவரை சுவிஸிலிருந்து கைது செய்து இங்கு கொண்டு வருவோம்!
வடக்கின் மீன்பிடித் தொழில் ஆபத்தில் - பாதுகாப்பு அமைச்சு அறிக்கை!
மின்சார சபையின் செலவுகளை நிர்வகிப்பதற்காக 5000 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர் - மின்வலு மற்றும் எரிசக்...
|
|
|


