பேருந்து கால்வாயில் வீழ்ந்து விபத்து: கர்நாடகாவில் 25 பேர் உயிரிழப்பு!

Saturday, November 24th, 2018

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தனியார் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்தனர் என செய்திகள் கூறுகின்றன.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து இன்று மதியம் பாண்டவபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது.

அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு விரைந்து சென்று கால்வாயில் தத்தளித்தவர்களை மீட்டு கரை சேர்த்தனர்.

நீச்சல் தெரியாதவர்கள் நீரில் மூழ்கி சிறிது நேரத்தில் இறந்துவிட்டனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.  இந்த விபத்தில் 25 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106