செயலாளர்கள் தடைகளின்றி கடமைகளை நிறைவேற்ற முடியும் : அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த!
Thursday, November 22nd, 2018
எந்தவித தடைகளுமின்றி அமைச்சுக்களின் செயலாளர்கள் கடமைகளை நிறைவேற்ற முடியுமென அரச நிர்வாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியால் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு முறையான விதத்தில் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அவர் விடுத்த விசேட அறிவித்தலில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, அரசியல் யாப்பின் 42ஆவது ஷரத்திற்குரிய 4 ஆவது பிரமாணத்தின் கீழ் அமைச்சு செயலாளர்களை நியமித்துள்ளார். எனவே அவர்களது நியமனம் குறித்து பிரச்சினைகள் எதுவும் கிடையாது என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
ஸ்ரான்லி வீதியில் திடீரென அறுந்து வீழ்ந்த உயரழுத்த மின்கம்பி! - மயங்கிய பெண்!
கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு விரைவாக கொண்டுவர நடவடிக்கை - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!
புனரமைக்கப்பட்ட எயிட்டி கிளப் பிரதமரினால் திறப்பு !
|
|
|


