ஸ்ரான்லி வீதியில் திடீரென அறுந்து வீழ்ந்த உயரழுத்த மின்கம்பி! – மயங்கிய பெண்!
Friday, June 24th, 2016
யாழ்ப்பாணம் – ஸ்ரான்லி வீதி ஸ்ரீதர் தியேட்டருக்கு அருகில் உள்ள மின்மாற்றியின் மேலே உள்ள உயரழுத்த மின் கம்பி ஒன்று நேற்று மாலை 3.45 மணியளவில் அறுந்து நடுத்தெருவில் விழுந்தது. இதனால் குறித்த பகுதியில் சுமார் மூன்று மணிநேரம் மின்சாரத்தடை எற்பட்டது.
நிலத்தில் கம்பி அறுந்து விழுந்தவுடன் பாரிய சத்தமும், தீப்பொறிகளும் எழுந்தன. இதனைப் பார்த்து அருகிலுள்ள கடையில் வேலை செய்யும் பெண்ணொருவர் திடீரென அதிர்ச்சி அடைந்து மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மின் விபத்தை அடுத்து சுமார் 20 நிமிடங்கள் குறித்த பாதை பொலிஸாரினால் தடை செய்யப்பட்டு இருந்தது. உடனடியாக மின்சார சபையினர் சம்பவ இடத்துக்கு வந்து மின் இணைப்பைத் துண்டித்து திருத்த வேலையில் ஈடுபட்டதனால் மாலை 6.30 மணியளவில் மீண்டும் மின்சார விநியோகம் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது.
Related posts:
புகையிரத கடவை காவலர்கள் வேலைநிறுத்தம்!
விஜயகலாவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 22ஆம் திகதி!
பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் உதவ முன்வந்துள்ளது!
|
|
|



