பேருந்து கொள்வனவிற்கு பணம் செலுத்த தயார் – போக்குவரத்து அமைச்சு!
Friday, November 16th, 2018
பணத்தினைச் செலுத்தி பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை போக்குவரத்து சபை தயாராக உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு உட்பட்ட 106 அரச பேருந்து சாலைகளில் 85 பேருந்து சாலைகள் இலாபத்துடன் இயங்குகின்றன.
இதன்காரணமாக தேவையாகவுள்ள பேருந்துகளை கொள்வனவு செய்து கொள்ள அந்தந்த பேருந்து சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய இலங்கை போக்குவரத்து சபைக்குட்பட்ட ஹட்டன் பேருந்து சாலையினால் 12 பேருந்துக்கள் பணம் செலுத்தி கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
Related posts:
இலங்கைக்கு அமெரிக்காவில் சுங்கத் தீர்வை!
டிசம்பர் மாத இறுதிக்குள் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெ...
வேகமாக பரவி வரும் ஜே.என்.1 புதிய வகை கொரோனா வைரஸ் - விவகாரத்தைக் கையாள தயாராக உள்ளதாக சுகாதார அமைச...
|
|
|


