நெல் தொகையை பயன்படுத்தி சந்தைக்கு அரிசி விநியோகம் – விவசாய அமைச்சு தெரிவிப்பு!
Tuesday, June 28th, 2022
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல் தொகையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட அரிசியை சந்தைக்கு விநியோகிக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது..
உச்சபட்ச விலைக்கு அமைய அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. அந்த அரிசி தொகையை சதொச வர்த்தக நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை தொடருந்து கட்டணங்களை திருத்தி அமைக்க போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
பேருந்து கட்டணங்களில் 50 சதவீதத்திற்கு ஒப்பாக தொடருந்து கட்டணங்களை திருத்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கமைய எதிர்வரும் நாட்களில் தொடருந்து கட்டணம் சீரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களிற்கு வீடுகள் : அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் த...
முடிவுக்கு வந்தது விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிரான விசாரணை!
பத்து நாட்களிற்கு மாத்திரம் இரண்டாயிரம் ரூபா - 14 நாட்களிற்கு முடக்கல் நிலை நீடிக்கப்படாது என இராஜா...
|
|
|


