நடைமுறைகளைக் கடைப்பிடிக்காத தேங்காய் எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை – அதிகார சபை!
Monday, November 12th, 2018
ஜனவரி மாதம் முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அனைத்து தேங்காய் எண்ணெய் வகைகளையும், விற்பனைக்கு ஏற்ற வகையில் சந்தையில் விநியோகிக்க வேண்டுமென தெங்கு அபிவிருத்தி அதிகார சபை, அனைத்து தேங்காய் எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணெய் போத்தல் மற்றும் ஏனைய பொதிகள், எண்ணெயின் வகை, தயாரிப்பு, காலவதியாகும் தினம், சில்லறை விலை, எடை, தயாரிப்பாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்காத தேங்காய் எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்தது!
உக்ரைனின் கோரிக்கை நேட்டோவால் நிராகரிப்பு!
இலங்கைக்கு மேலும் ஆறு மாதங்கள் சலுகை வழங்கியுள்ளது பங்களாதேஷ்!
|
|
|


