ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் முக்கிய அமைச்சுக்கள்!
Wednesday, November 7th, 2018
ஊடகத்துறை அமைச்சு மற்றும் அதன் கீழ் காணப்படும் நிறுவனங்கள் உள்ளிட்ட விடயதான விவகாரங்கள் அனைத்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக, அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் கீழ், ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக் கூடிய அமைச்சுகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக் கூடிய நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
இலண்டன் பயங்கரவாத தாக்குதல் - இலங்கை வைத்தியரக்கு பிரித்தானியா பாராட்டு!
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம - குருணாகல் வரையான பகுதியில் 20ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்கு!
இயலுமை உள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் எரிபொருள் இறக்குமதி செய்ய வாய்ப்பு - பிரதமர் ரணில் விக்கிரமசிங...
|
|
|


