தொடர் குண்டுவெடிப்பில் 6 பேர் பலி : ஈராக்கில் பதற்றம்!
Wednesday, November 7th, 2018
ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் இராணுவ வீரர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாக்தாத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஏடன் நகரில் பஸ் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பின் போது குண்டு வெடித்தது. இதில் ஒரு ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார். அல்-சாகா நகரில் அரசு ஊழியர் ஒருவரின் காரில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்தனர்.
சர்தார் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அதே போல் பாக்தாத்தின் வடகிழக்கு பகுதியில் அடுத்தடுத்து 2 பஸ்களில் குண்டு வெடித்ததில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106