உலங்குவானூர்தி விபத்து – 25 பேர் உயிரிழப்பு!
Friday, November 2nd, 2018
ஆப்கானிஸ்தானில் பரா மாகாணத்தில் அரசு உயரதிகாரிகள் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர் எனா சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மோசமான காலநிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அனார் டாரா மாவட்டத்துக்கு உட்பட்ட மலைப்பகுதி வழியாக சென்றபோது மோசமான வானிலையால் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் சென்ற 25 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இன்னும் 10 ஆண்டுகளில் கனடாவின் பொருளாதாரம் 150 பில்லியன் டொலர்!
கொரோனாவின் தாண்டவம் – உயிர்ப்பலி 11 ஆயிரத்தை தாண்டியது!
இலங்கை வரும் சீன கப்பல் - பொருளாதார நலன் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைள் இடம்பெறுவதாக இந்தியா அறிவிப்...
|
|
|


