கையடக்கத் தொலைபேசியை திருடிய பெண் – சீ.சீ.டி.வீ கெமராவில் காட்சிகள் பதிவு

Thursday, March 17th, 2016

கையடக்கத் தொலைபேசி ஒன்றிக்கு பெட்டரி கொள்வனவு செய்வதற்காக வருகைதந்து,  குறித்த விற்பனை நிலையத்தில் இருந்த 5000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்றை திருடிச் சென்ற பெண்ணை கைது செய்வதற்கு பொலிஸார் வலைவீசியுள்ளனர்.

அட்டன் நகரிலுள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் இந்த சம்பவம் 16.03.2016 அன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த தொலைபேசி விற்பனை நிலையத்திற்கு வருகைதந்த சந்தேக நபரான பெண், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசி ஒன்றினை திருடிச் செல்லும் போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கமராவில் காணொளி பதிவாகியுள்ளது.

இதனை பயன்படுத்தி குறித்த பெண்ணை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக விற்பனை நிலைய உரிமையாளர் அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை அட்டன் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106