புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு?  

Sunday, October 28th, 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான 30 பேர் கொண்ட அமைச்சரவை நாளை சத்தியபிரமாணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவை உறுப்பினர்களின் பெயர்களை இறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளன.

30 பேர் அமைச்சரவை அமைக்க வேண்டுமெனின் நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றை கொண்டு வர வேண்டும். இதனால் அமைச்சரவை நியமனத்தை இரண்டு நாட்களுக்கு பின்நகர்த்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சராக பதவியேற்கவுள்ளார். சட்ட மா அதிபர் திணைக்களத்தையும் ஜனாதிபதி பொறுப்பேற்கவுள்ளார்.

Related posts:


வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு புதிய திட்டம் - ஜனாதிபதி ஊ...
சாதாரணதர மாணவர்களின் நலன்கருதி ஜனவரி 25 ஆம் திகதிக்கு பின்னர் தனியார் கல்வி நிலையங்களை திறப்பது தொடர...
இலங்கையிலும் போக்குவரத்து பல்கலைக்கழகம் - போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை!