விராட் கோஹ்லிக்கு இலங்கை வீரர்கள் வாழ்த்து!
Thursday, October 25th, 2018
ஒருநாள் போட்டிகளில் அதி வேகமாக 10000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை செய்துள்ள கோஹ்லிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி மீண்டும் சதமடித்தார்.
அவர் 81 ரன்கள் எடுத்த போது அவரது ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொட்டது.
இதன்மூலம் 10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்தவர் என்ற புதிய சாதனையை கோஹ்லி படைத்தார். இதையடுத்து கோஹ்லிக்கு பல்வேறு வீரர்கள் வாழ்த்துக்கள் கூறியுள்ளனர்.
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது டுவிட்டர் பதிவில் வேகமாகவும் சிறப்பாகவும் 10 ஆயிரம் ஓட்டங்களை தொட்டுள்ளீர்கள்.
உங்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
இன்னொரு இலங்கை வீரர் கவுசல் சில்வா தனது பதிவில் உங்கள் சிறந்த சாதனைக்கு வாழ்த்துக்கள். நீங்கள் பேட்டிங் செய்வதை காண்பது எப்போதும் சிறப்பானது.
விளையாட்டின் மீது உங்களுக்கு இருக்கும் பேரார்வம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார். இப்படி பல முன்னணி வீரர்கள் கோஹ்லிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106