11 ஆயிரத்து 86 அபாயகர வெடிப்பொருட்கள் வடக்கில் இருந்து அகற்றல் – ஸார்ப் நிறுவனம்!
Monday, October 22nd, 2018
மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் மூலம் இதுவரை 11 ஆயிரத்து 86 அபாயகர வெடிப்பொருட்கள் வடக்கில் அகற்றப்பட்டுள்ளன.
இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனம் முன்னெடுத்துவருகின்றது.
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் அபாயகர வெடிப்பொருட்களை அகற்றும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்ட்டுள்ளன.
ஆறு இலட்சத்து நாற்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று பதின்மூன்று சதுரமீற்றர் பரப்பளவில் இந்த பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றது.118 பணியாளர்கள் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்நிறுவனம் நான்கு இலட்சத்து இருபத்து இரண்டாயிரத்து எண்ணூற்று இருபத்து எட்டு நிலப்பரப்பினை மக்களின் பயன்பாட்டிற்காக அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106