பஞ்சாப்  ரயில் விபத்து: செல்பி மோகஆம காரணம் என தகவல்!

Saturday, October 20th, 2018

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தசரா கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற ரயில் விபத்திற்கு செல்பி மோகமே காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் தெரிவித்துள்ளனர்.

அமிர்தசரசில் தசரா கொண்டாட்டத்தின் போது ரயில் தண்டவாளத்தின் மீது நின்று கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த ரயில் மோதியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. 50 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த கோர விபத்திற்கு காரணம், மக்களின் செல்பி மோகம் தான் என தெரிய வந்துள்ளது.

தசரா கொண்டாட்டத்தில் ராவணனின் உருவ பொம்பை எரிக்கப்பட்ட போது, ரயில் வருவதை கண்டு கொள்ளாமல் ஏராளமானோர் தண்டவாளத்தின் மீது நின்று அதனை தங்களின் மொபைல் போனில் படம்பிடித்துக் கொண்டிருந்தனர். ஏராளமானோர் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். இவை விபத்து நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளில் பதிவாகி உள்ளது.

தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது ரயில் மோதி விட்டு சென்ற பிறகும் பலர் எவ்வித பதற்றமும் இன்றி தொடர்ந்து தங்களின் மொபைல் போன்களில் விபத்து நடந்த காட்சிகளை படம்பிடித்துக் கொண்டிருந்தனர். இதற்கு பலரும் கண்டனமும், வேதனையும் தெரிவித்துள்ளனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106