வெள்ளிக்கிழமையன்று எரிபொருள் விலை சூத்திரம்!
Thursday, October 18th, 2018
எரிபொருள் விலை சூத்திரம், நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு வழங்கப்படும் என பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
விலை சூத்திரத்தை தான் வழங்குவதாக பிரதியமைச்சர் அஜித் மன்னப்பெரும நேற்று தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை சூத்திரம் ஊடகங்களுக்கு வழங்கப்படும் என பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும நேற்று காலை ஊடக அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தார்.
அது தொடர்பில் அன்று மாலை தமது அமைச்சிற்கு வருமாறும் பிரதியமைச்சர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேவையற்ற வேட்பாளர்கள் : சட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்கிறது தேர்தல் ஆணைக்குழு!
டொலர் நெருக்கடிக்கு தீர்வாக டிசம்பர் வரை சந்தைகளுக்கு புதிய சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது – ...
மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பை நிதி அமைச்சால் கட்டுப்படுத்த முடியாது - நிதி இராஜாங்க அமை...
|
|
|


