வங்காள விரிகுடாவில் “TITLI” என்ற பலமான சூறாவளி!

Thursday, October 11th, 2018

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட “TITLI” என்ற பலமான சூறாவளிக் காற்றானது இன்று 02மணி 00 மணித்தியாலத்தின் போது வட அகலாங்கு 18.70 மற்றும் கிழக்கு நெடுங்கோடு 84.90களுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத்தொகுதியானது திருகோணமலைக்கு 1200 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளதுடன் மேலும் பலமடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை இந்தியாவின் ஆந்திரப்பிரதேசக் கரையை கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றிலிருந்து சிறிது குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, தென், மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106