ஜொலிஸ்ராரின் தொடரில் சென்றலைட்ஸ் இறுதிக்கு!

Thursday, September 27th, 2018

ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகம் நடத்திவரும் துடுப்பாட்டத் தொடரில் சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழக அணி இறுதிக்குத் தகுதி பெற்றது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அரையிறுதியாட்டத்தில் சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி 27 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது. துவாரகசீலன் 31 ஓட்டங்களையும் சுபேந்திரன் 27 ஓட்டங்களையும் கஜேந்திரன் 25 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் தசோபன்,கோகுலன் ஆகியோர் தலா 2 இலக்குகளை வீழ்த்தினர்.

155 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென்ற பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ்  விளையாட்டுக்கழக அணி 17.5 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 4 இலக்குகளை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. ஜெனோசன் 50 ஓட்டங்களையும், செல்ரன் 39 ஓட்டங்களையும், கௌதமன் 28 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் லோகதீஸ்வர், துவாரகசீலன் ஆகியோர் தலா 2 இலக்குகளை வீழ்த்தினர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106