பாதிப்புற்ற மின்மாற்றி 30 வருடங்கள் பழைமையானது!

Wednesday, March 16th, 2016

நாட்டில் திடீரென இடம்பெற்ற மின்சாரத் தடை தொடர்பில், மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று முற்பகல் கையளிக்கப்பட்டுள்ளது.

பியகம  மின் விநியோக நிலையத்தில் காணப்படும்  மின்மாற்றி வெடிப்புக்கு உள்ளானமையினாலேயே இந்த மின்தடை ஏற்பட்டதென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மின்மாற்றியானது, சுமார் 30 வருடங்கள் பழைமைவாய்ந்ததென குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இந்த மின்மாற்றியை, முழுமையாக பழுதுபார்க்க வேண்டியுள்ளது. இது தொடர்பில், பழுதுபார்க்கும் நிறுவனத்துக்கு கடந்த 2014ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியன்று, மின்சார சபையினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த அறிக்கை அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சுரேன் பட்டகொடவினால் தயாரிக்கப்பட்டு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் கைச்சாத்துடன், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

.இருப்பினும், அந்த மின்மாற்றியை ஏன் முழுமையாக பழுதுபார்க்கவில்லை என்பது பிரச்சினைக்குரிய விடயமாகவே உள்ளது. இவ்வாறு பழுதுபார்க்காமையே, அது வெடிப்புக்குள்ளாகக் காரணமாகியிருக்கலாம் என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106