இன்று ஆரம்பமாகிறது ஆசிய விளையாட்டுப்போட்டி!
Saturday, August 18th, 2018
45 நாடுகள் பங்கேற்கும் 18ஆவது ஆசிய விளையாட்டுப்போட்டி இந்தோனேசியாவில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தப் போட்டி இறுதியாக கடந்த 2014ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்றது.
கடந்த 1962ஆம் ஆண்டுக்கு பின்னர், இந்தோனேசியாவில் இந்த போட்டி நடைபெறுகிறது.
இதில் இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, ஈரான், தாய்லாந்து, கத்தார், மலேசியா உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்கின்றன. 42 விளையாட்டுகளில் 482 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறனர்.
Related posts:
தேசிய பாடசாலைகளில் 10,535 ஆசிரியர் வெற்றிடங்கள் - 2 வாரங்களில் நிரப்ப ஏற்பாடு - மாகாண பாடசாலைகளின் ...
பிரித்தானியாவில் குடியுரிமை வழங்கப்படுவதில் கடும் கட்டுப்பாடு!….
முல்லைத்தீவில் போதைப் பொருளுடன் இருவர் கைது!
|
|
|


