கிணற்றிலிருந்து வெளிநாட்டு பெண்ணின் சடலம் : யாழில் சம்பவம்!
Friday, August 17th, 2018
சாவகச்சேரி பிரதேசத்திலுள்ள கிணறொன்றில் இருந்து வெளிநாட்டு பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக சாவகச்சேரி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் இருந்து வருகை தந்து, தனது உறவினர்களுடன் வசித்து வந்த 64 வயதுடைய பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இடம்பெறவுள்ள நிலையில், சாவகச்சேரி காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியானது
தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, உள்நாட்டுத் தொழில்முனைவோரு...
55 வயதிற்குப் பின்னர் சம்பளம் அல்லது ஓய்வூதியம் கிடைக்காத சிரமம் தொடர்பில் கவனம் - இராஜாங்க அமைச்ச...
|
|
|


