நான் அரசியலுக்கு ஒருபோதும் வரமாட்டேன் – சங்கா !
Monday, August 13th, 2018
தான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் அது தொடர்பில், தனக்கு எந்தவொரு விருப்பமும் இல்லையென்றும், இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் சமூக வலைத்தளத்தில், அரசியல் பிரவேசம் தொடர்பான பதிவொன்றை இட்டுள்ள குமார் சங்கக்கார, தன்னுடைய அரசியல் பிரவேசம் தொடர்பில் வெளியாகிவரும் செய்திகளைக் கருத்திற் கொண்டே, தான் இந்தப் பதிவை இடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டின் பின்னர், பல வருடங்களாகத் தனக்காக அர்ப்பணித்த தனது குடும்பம் மீதே, தான் தற்போது முழுமையான அவதானம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு விதத்திலும், தனக்கு அரசியல் தொடர்பான ஈடுபாடு இல்லையென்றும் அரசியலும் மக்கள் சேவையும், மிகவும் பொறுப்புடன் செய்யக்கூடியவை என்றும், குமார் சங்கக்கார மேலும் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106