அராலியில் டெங்குத் தொற்று : 10 பேர் சிகிச்சையில் சேர்ப்பு !

Tuesday, August 7th, 2018

வலி.மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட அராலி மேற்கு பிரதேசத்தில் டெங்குத் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.

கடந்த மூன்று வாரங்களில் அராலி தெற்கில் 10 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்குத் தாக்கத்தினை அடுத்து சங்கானை சுகாதார மருத்துவப் பணிமனை மற்றும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவப் பணிமனை மற்றும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை ஊழியர்கள் இணைந்து அராலி தெற்கு முழுவதுமாக டெங்குக்கு எதிராக புகையடிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அராலி முழுவதுமாக உள்ள வீடுகளின் சுத்தங்களைப் பார்வையிட்டு வருவதுடன் கோம்பை, சிரட்டை, ரின் பேணிகள் மற்றும் நீர் தேங்கும் இடங்களை வைத்திருப்போருக்கு விழிப்புணர்வூட்டி வருவதுடன் சேகரிக்கப்பட்ட பொருள்கள் பொருத்தமான தொழில்நுட்ப முறையில் அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீட்டின் சூழலை அசுத்தமாக வைத்திருக்கும் மக்களுக்கு எதிராக சட்டத்தின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


சர்வதேச நாணய நிதியம் வகுத்துள்ள பொருளாதார இலக்குகளை வெற்றிகொள்வோம் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம...
இன்று நள்ளிரவுமுதல் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படுகின்றது ரயில் சேவை - அமைச்சர் பந்துல குணவர்தன அறிவ...
ஒரு சில உயர் பெறுபேறுகளை வைத்துக்கொண்டு மாவட்டம் கல்வி நிலையில் உயர்ந்துவிட்டதாக தம்பட்டம் அடிக்க மு...