ரஷ்ய உலங்கு வானூர்தி சைபீரியாவில் விபத்து : 18 பேர் பரிதாபப் பலி!

Saturday, August 4th, 2018

ரஷ்ய நாட்டை சேர்ந்த இரு ஹெலிகொப்டர்கள் சைபீரியாவில் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் ஒரு ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிரஸ்னோயார்ஸ்க் மாகாணத்தில் உள்ள துருகான்ஸ்க் மாவட்டத்தில் இருந்து இரு Mi-8 ஹெலிகாப்டர்கள் புறப்பட்டன.
ஒரு ஹெலிகாப்டரில் பெட்ரோல் கிணற்றில் பயன்படுத்தும் உபகரணங்கள் ஏற்றப்பட்டிருந்ததுடன், மற்றொரு ஹெலிகாப்டரில் அந்த எண்ணெய் கிணற்றில் வேலை செய்யும் 15 பணியாளர்கள் உள்பட 18 பேர் பின்னால் செல்ல புறப்பட்டனர்.
குறித்த அந்த ஹெலிகாப்டர் மேலே ஏற முயன்றபோது முன்னால் சென்ற ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டு வெளியே நீட்டிகொண்டிருந்த இயந்திரத்தின் ஒருபகுதியின் மீது மோதி கீழே விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
கீழே விழுந்த ஹெலிகாப்டர் தீப்பிடித்து வெடித்து சிதறிய விபத்தில் அதில் இருந்த 18 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106