ரஷியா மீதான பொருளாதார தடையில் இருந்து இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு: அமெரிக்க செனட்!

Friday, August 3rd, 2018

ரஷியா மீதான பொருளாதார தடையில் இருந்து இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. மேலும் அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் இதற்கான மசோதா நிறைவேறியது.

ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்து உள்ளது. இதன் காரணமாக ரஷியாவுடன் பிற நாடுகள் வர்த்தக உறவு வைத்துக்கொள்ள முடியாது.ஆனால் இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே நல்லுறவு உள்ளது.

ரஷியாவிடம் இருந்து இந்தியா 4.5 பில்லியன் டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.30 ஆயிரத்து 600 கோடி) ‘எஸ்-400 டிரையம்ப்’ வான்பாதுகாப்பு சாதனங்களை (5 எண்ணிக்கை) வாங்குவதற்கு திட்டமிட்டு வருகிறது.

ஆனால் இதற்கு அமெரிக்க பொருளாதார தடை, முட்டுக்கட்டையாக இருக்கும் என கருதப்பட்டது.

இந்த நிலையில் ரஷியா மீது விதித்து உள்ள பொருளாதார தடை, இந்தியா உள்ளிட்ட அமெரிக்காவின் உத்தியியல் கூட்டாளி நாடுகளை (போர் தந்திர கூட்டாளி நாடுகள்) பாதிக்காமல் இருக்கிற வகையில், அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் மசோதா கொண்டு வரப்பட்டது.

இந்த மசோதா நேற்று முன்தினம் நிறைவேறியது. அதற்கு ஆதரவாக 87 ஓட்டுக்களும், எதிராக 10 ஓட்டுக்களும் விழுந்தன. செனட் சபையில் நிறைவேறிய நிலையில், ஜனாதிபதி டிரம்பின் ஒப்புதலுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106