பாகிஸ்தான் பிரதமர் பதவியேற்பு விழா : அமீர் கான், கபிலுக்கு அழைப்பு!

Thursday, August 2nd, 2018

பாகிஸ்தானின் புதிய பிரதமராக, இம்ரான்கான் பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, பாலிவுட் நடிகர் அமீர் கான், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள், சுனில் கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாக்., பார்லி., தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரர், இம்ரான் கான், 65, தலைமையிலான, பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், உதிரி கட்சிகள் ஆதரவுடன், இம்ரான் கான், வரும், 11ல், பாக்., பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இந்த விழாவில் பங்கேற்கும்படி, பாலிவுட் நடிகர் அமீர் கான், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள், சுனில் கவாஸ்கர், கபில் தேவ், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கு, இம்ரான் கான் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுப்பது குறித்து பரிசீலிக்கும்படி, இம்ரான் கான் கட்சி நிர்வாகிகள், பாக்., வெளியுறவு அமைச்சக அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர். இம்ரான் கானின் பானிகாலாவில் உள்ள, இம்ரான் கானின் வீடு மற்றும் சுற்றுப் பகுதியின் பாதுகாப்புத் தன்மை குறித்து, போலீஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

இம்ரான் கானின் வீடு அமைந்துள்ள பகுதி, பாதுகாப்பு குறைவாக இருப்பதாக கூறிய அதிகாரிகள், அமைச்சர்களுக்கான குடியிருப்பு பகுதியில், அவருக்கு வீடு ஒதுக்க முடிவு செய்தனர்.அங்கு தனக்கு பிடித்த வீட்டில் இம்ரான் கான் குடியேறுவார் என அதிகாரிகள் கூறினர்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106