மீண்டும் கார்களின் விலைகள் அதிகரிப்பு!

Wednesday, August 1st, 2018

1000CC இற்கு குறைந்த சாதாரண மோட்டார் வாகனங்கள் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கான உற்பத்தி வரியினை அதிகரிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கடந்த காலங்களில் இலங்கைக்கு இந்த மோட்டார் வாகனங்கள் அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாலேயே நிதி அமைச்சு மேற்கண்ட தீர்மானத்தினை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய சாதாரண 1000CC இற்கு குறைந்த வாகனங்களுக்கு முன்னர் 14 இலட்சம் ரூபா வரி அறவிடப்பட்டிருந்த நிலையில் புதிய வரியாக 15 இலட்சம் ரூபா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 1000CC ஹைப்ரிட் கார்களுக்கான வரியானது இதற்கு முன்னர் 8.5 இலட்சமாக இருந்த நிலையில் தற்போது 12.5 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சம்: தீவக வலய பாடசாலைகள் நாளை வழமைபோன்று இயங்கும் என வடக்கு மாகாண கல்வி அம...
தானிய வகைகளைக் கொள்வனவு செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டுமென - பொது சுகாதார பரிசோதகர்கள...
பொது வேட்பாளரை நிறுத்தி வாக்குகளை சிதறடிப்பது தமிழரது அரசியலுரிமை பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மேலும்...