மீன்பிடித்துறை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை!
Wednesday, August 1st, 2018
2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் நன்னீர் மீன்பிடித்துறையில் பெறப்படும் உற்பத்திகளை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.
தற்போது நன்னீர் மீன்பிடித் துறையை விரிவுபடுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும், மீன் வளர்ப்பிற்குப் பொருத்தமான நீர்த்தேக்கங்களில் நன்னீர் மீன்பிடித் தொழில்துறைக்குத் தேவையான மீன் குஞ்சுகளை விடுவதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார் .
மழை காலங்களில் நீர் நிரம்பும் குளங்களில் நன்னீர் மீன்பிடித் தொழில்துறையை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
ஒலிம்பிக் போட்டிக்கான தீபச் சுடர் வியாழனன்று ஏற்றப்படும்!
பயணக் கட்டுப்பாடுகளால் பெற்றுக்கொண்ட பயன்களை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் மாற்று நடவடி...
ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மாணவர்கள் பயணிக்க வேண்டும் – கூடுதலான மாணவர்களை ஏற்றிச்சென்றால் சட்ட நடவட...
|
|
|


