குடிநீர் கிணற்றின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு – வேலணை பிரதேச சபையின் தவிசாளர்!

Thursday, February 7th, 2019

மண்கும்பான் சாட்டி வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான குடிநீர் கிணற்றின் நீர் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்தார்.

மேற்படி கிணற்றிலிருந்தே பிரதேச சபை நீர் பெற்று விநியோகிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. இந்த நிலையில் விசமிகளால் இரு வாரங்களுக்கு முன்னர் கழிவு ஒயில் ஊற்றப்பட்டது.

இது குறித்து பொலிஸில் முறைப்பாடு மேற்கொண்டதுடன் கிணற்றினை இறைத்து துப்புரவாக்கினோம். என பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மேற்படி குடிநீரில் எண்ணெய் கலந்துள்ளதா குடிநீர் பாவனைக்கு பயன்படுத்த முடியுமா என அறிந்து கொள்ளுமுகமாக பரிசோதனைக்கு நீர் மாதிரியை அனுப்பியுள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.

இதேவேளை குடிநீர் கிணற்றில் கழிவு ஒயில் வீசிய விசமிகள் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts:


அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளம் உரு...
சுவிஸ் தூதரக ஊழியர் மீதான குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அனுமதி!
அடுத்த சில மாதங்களில் இ-பாஸ்போர்ட் முறை அறிமுகப்படுத்தப்படும் - அமைச்சர் திரான் அலஸ் அறிவிப்பு!