சுங்கக் கட்டளைச் சட்டத்தில் மாற்றம்?
Tuesday, June 21st, 2016
சுங்க கட்டளைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் சுமார் 150 வருடம் பழமை வாய்ந்தது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 1861 ஆம் ஆண்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்தது.
அத்துடன் இதுவரையில் சுங்கக் கட்டளைச் சட்டத்தில் 50 சதவீதமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அது முழுமையாக திருத்தியமைக்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்தது.
Related posts:
இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் - பொதுமக்களுக்கு வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் எச்சரிக்கை!
தமிழ் இளைஞர்களை பலவந்தமாக போராளிகளாக்கியவர்கள் இன்று மனித உரிமைகள் குறித்து பேசுகின்றனர் - அமைச்சர் ...
750,000 அரசு ஊழியர்களுக்கு ஆபத்து - நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!
|
|
|


