சிறந்த விவசாயிகள் தெரிவுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
Saturday, July 28th, 2018
வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தால் 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த விவசாயிகள் தெரிவானது கீழ்வரும் நான்கு வகுதிகளின் அடிப்படையில் யாழ் மாவட்டச் செய்கையாளர்களிடையே நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
- சிறந்த வீட்டுத் தோட்டச் செய்கையாளர்கள்
- சிறந்த சேதன விவசாயச் செய்கையாளர்கள்
- காலநிலை மாற்றத்திற்கேற்ப பயிர்ச்செய்கை மேற்கொள்பவர்
- சிறந்த விவசாயச் செயன்முறைத் தொழில்நுட்பங்களை பழ உற்பத்தியில் நடைமுறைப்படுத்துபவர்
போட்டியில் பங்குகொள்ள விரும்பும் போட்டியாளர்கள் தங்கள் பகுதியிலுள்ள விவசாயப் போதனாசிரியர் அலுவலகத்தில் போட்டிக்கான விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக்கொள்ள முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை 2018 ஆவணி மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் விவசாயப் போதனாசிரியருக்கு கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைத்தல் வேண்டும் அல்லது மாவட்ட காரியாலயத்தில் சமர்ப்பிக்கவும். குடித உறையின் இடது பக்க மேற்பக்கத்தில் சிறந்த விவசாயிகள் தெரிவு 2018 எனக் குறிப்பிட வேண்டும்.
சிறந்த ஏனைய செய்கையாளர்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் விவசாயத் திணைக்களத்தால் கடந்த காலங்களில் மாவட்ட மட்டத்தில் கௌரவிக்கப்பட்டவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள முடியாது.
மேலதிக தொடர்புகளுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 021 222 2175, 077 305 1363, 077 691 3456 என பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106