காட்டுத்தீ – கலிபோர்னியாவில் 2 தீயணைப்பு வீரர்கள் பலி!
Saturday, July 28th, 2018
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளதுடன், 3 ஆயிரம் பேருக்கு வீடுகளில் மின்சார வசதி தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2 நாட்களில் மீட்பு பணியின்போது 2 தீயணைப்பு வீரர்கள் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். சுமார் 44450 ஏக்கர் பரப்பளவில் தீப்பிடித்து எரிவதாக தெரிவிக்கப்படுகிறது.
சாஸ்தா கவுண்டி பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் மக்களுக்கு தேவையான உணவு வழங்கவும், பண்ணைகளில் இருந்து மீட்கப்பட்ட கால்நடைகளை பராமரிக்கவும் மத்திய அரசின் அவசர உதவி தேவை என்று கவர்னர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related posts:
சிரிய குண்டு தாக்குதலில் தாக்குதலில் 30 பேர் பலி!
ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு சிறை தண்டனை!
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களே 80 வீதம்!
|
|
|


