ஒருநாள் போட்டியில் இருந்து ஸ்டெயின் ஓய்வு!
Saturday, July 28th, 2018
தென்ஆப்பிரிக்க அணியின் மற்றுமொரு முன்னணி வீரரும் வேகப்பந்து வீச்சாளருமான டெல் ஸ்டெயின் வரும் உலக கிண்ணத் தொடருடன் ஓய்வுபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காயத்தால் அவதிப்பட்ட அவர் அதிலிருந்து மீண்டும் வந்துள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார். இந்த நிலையில் 2019-ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாக கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு நடக்கும் உலக கோப்பை போட்டியில் விளையாட முயற்சிப்பேன். உலககோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டியில் விளையாட முடியும் என்று நினைக்கவில்லை என்றார்.
Related posts:
ஆசியக்கிண்ண டி20 : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!
உலக கிண்ண தகுதிகாண் கிரிக்கட் - இலங்கை பெண்கள் அணி வெற்றி!
போராடியது மேற்கிந்தியதீவுகள் : 15 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி முன்னிலையில்!
|
|
|


