உயிர்நீத்த அமெரிக்க வீரர்களின் உடைமைகளை வழங்கியது வடகொரியா!
Sunday, July 29th, 2018
கடந்த 1950-53 ஆண்டுகளில் நடந்த கொரிய போரின் போது சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். போருக்கு பின்னர் கொரியா இரண்டாக உடைந்தது. தென்கொரியா அமெரிக்காவுக்கு நெருக்கமாகவும், வடகொரியா ரஷியா மற்றும் சீனாவுக்கு நெருக்கமானதாகவும் மாறிப்போனது.
அமெரிக்கா – வடகொரியா இடையே பல ஆண்டுகளாக இருந்த பகை கடந்த ஜூன் மாதம் டிரம்ப் – கிம் சந்திப்பை அடுத்து குறைந்துள்ளது. சிங்கப்பூரில் நடந்த இந்த சந்திப்பின் போது, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் முக்கியமான ஒன்று, கொரிய போரில் மரணமடைந்த அமெரிக்க வீரர்களில் 55 பேர் பயன்படுத்திய உடைமைகள் வடகொரியா வசமுள்ளது. அதனை மீண்டும் அமெரிக்காவிடம் தர வேண்டும் என்பதாகும். பேச்சுவார்த்தையில் ஒத்துக்கொண்டதன்படி, வடகொரியா 55 வீரர்களின் உடைமைகளை தென்கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத்தளத்தில் ஒப்படைத்தது.
இந்த பொருட்கள் உரிய மரியாதை அளிக்கப்பட்ட பின்னர், அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்காவுக்கு உடைமைகள் வந்ததும் சம்மந்தப்பட்ட வீரர்களின் குடும்பத்தினரிடம் அவை ஒப்படைக்கப்பட உள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106