இந்தியா அபார வெற்றி!
Tuesday, June 21st, 2016
இந்தியா – ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது 20 ஒவர் போட்டியில், இந்தியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 1-1 என இந்தியா சமன் செய்துள்ளது. ஹராரேவில் நடந்த போட்டியில், ஜிம்பாப்வே அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன் படி முதலில் துடுப்பாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 99 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜிம்பாப்வே வீரர் பீட்டர் மூர் 31 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் குல்கர்னி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
100 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 13.1 ஒவரில் விக்கெட் இழப்பின்றி 103 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் மன்தீப் சிங் 52* ஓட்டங்களும், லோகேஷ் ராகுல் 47* ஓட்டங்களும் குவித்தனர்.
இதன் மூலம் 20 ஒவர் தொடர்1-1 என சம நிலையை எட்டியுள்ளது. எதிர்வரும் ஜூன் 22ம் திகதி நடக்கும் கடைசி மற்றும் மூன்றாவது 20 ஒவர் போட்டியில் வெற்றிப்பெறும் அணியே தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106