ஜொலிஸ்ரார் வெற்றிக் கிண்ணம் மானிப்பாய் பரீஸ் அணி வெற்றி!
Thursday, July 26th, 2018
ஜொலிஸ்ரார் வெற்றிக் கிண்ணத்திற்காக ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழகம் நடத்தும் 30 பந்து பரிமாற்றங்களைக் கொண்ட துடுப்பாட்ட சுற்றுப் போட்டியின் 10 ஆவது போட்டி கடந்த 21 ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிக்கு யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில் மானிப்பாய் பரீஸ் அணி ஸ்கந்தாஸ்ரார் அணியை 22 ஓட்டங்களால் வெற்றி பெற்று 2 ஆவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியின் மூலம் முதலில் துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் பரீஸ் அணியினர் 28.4 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 262 ஓட்டங்களைப் பெற்றனர். சுபதீபன் – 67, கிசோ – 33, வினோத் – 38, சூரி – 15, பானுஸன் – 24, கனிஸ்ரன் – 36 ஓட்டங்களைப் பெற்றனர். புருசோத்மன் – 3, துவாரகன், தனூஸன் தலா ஒரு இலக்கினையும் பிரசான், அஜன்தன் தலா 2 இலக்குகளையும் கைப்பற்றினர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸகந்தாஸ்ரார் அணி 26.5 ஓவர்களால் சகல இலக்குகளையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றனர். ரொபேட்ரிஸான் – 113 (இத் தொடரில் முதலாவது சதம்), தனூஸன் – 64, புருசோத்மன் – 21 ஓட்டங்களைப் பெற்றனர். கிசோக்குமார் – 6, கனிஸ்ரன் – 3, அனோஜன் – 1 இலக்கினை கைப்பற்றினர். இப்போட்டியின் மூலம் யாழ் சென்றல் விளையாட்டுக் கழகம் நடாத்தும் தரவரிசைப் பட்டியலுக்கு மானிப்பாய் பரீஸ் அணி 6.84 புள்ளிகளையும் ஸ்கந்தாஸ்ரார் அணி 3.40 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106