மேலும் 4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச சேவையில் வேலை வாய்ப்பு!
Wednesday, July 25th, 2018
அரச துறைகளில் மேலும் 4 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேர்முகப் பரீட்சைகளுக்கு அழைக்கப்பட்டு கூடிய பெறுபேறுகளைப் பெறும் பட்டதாரிகள் 4 ஆயிரம் பேர் இதன்படி அரச தொழில் துறைகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
அரச அபிவிருத்தி அதிகாரிகளாக இவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
Related posts:
மானிப்பாயில் 12 வீதிகள் அடுத்தாண்டு காப்பெற்றாகும்!
கோர விபத்து: இருவர் படுகாயம்!
நாகதேவன் இறங்குதுறையை புனரமைத்து தருமாறு கோரிக்கை!
|
|
|


