யாழ் மாவட்ட ஏ அணி அசத்தல் வெற்றி!

Wednesday, July 25th, 2018

வடமாகாண துடுப்பாட்டச் சங்கம் நடத்தும் 23 வயதுக்குட்பட்ட மாவட்ட அணிகளுக்கு இடையிலான தொடரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆட்டமொன்றில் யாழ்ப்பாண மாவட்ட ஏ அணி 149 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட ஏ அணியை எதிர்த்து முல்லைத்தீவு மாவட்ட அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண மாவட்ட ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 பந்துப் பரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக நிசான் 58 ஓட்டங்களையும் அலன்ராஜ் 49 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரதுசன் 4 இலக்குகளையும் அஞ்சேயன் 2 இலக்குகளையும் வீழ்த்தினர். 239 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய முல்லைத்தீவு மாவட்ட அணி 21.1 பந்துப் பரிமாற்றங்களில் 89 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. கயன் ஆட்டமிழக்காமல் பெற்ற 30 ஓட்டங்களே அதிகபட்சம்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106