அபார வெற்றி பெற்ற இலங்கை !

Saturday, July 14th, 2018

 தென் ஆப்ரிக்கா அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் 278 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றியை தனதாக்கியது.

இலங்கை அணியின் பிரபல வீரர்களான டில்ருவான் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத்தின் சிறப்பான பந்து வீச்சின் மூலம் இலங்கை அணி வெற்றியை தனதாக்கியது.

இந்நிலையில் தென் ஆப்ரிக்கா அணிக்கு 352 ஓட்டங்கள் வெற்றி இலக்காக இருந்த நிலையில், தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இனிங்சில் 73 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களையும் இழந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இனிங்சில் 287 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், திமுத் கருணாரத்ன 158 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

இந்நிலையில், தென் ஆப்ரிக்க அணி முதல் இனிங்சில் 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 190 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதற்கமைய, தென் ஆப்ரிக்கா அணிக்கு 352 ஓட்டங்கள் வெற்றி இலக்காக இருந்த நிலையில், 73 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்ட நிலையில், இலங்கை அணி 278 ஓட்டங்களினால் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியை தனதாக்கியது.

டில்ருவான் பெரேரா  06 விக்கட்களையும், ரங்கன ஹேரத் 03 விக்கட்களையும் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு வழவகுத்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106