காலி டெஸ்ட் – முன்னிலையில் இலங்கை!

Friday, July 13th, 2018

சுற்றுலா தென்னாபிரிக்கா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையே காலி சர்வதேச விளையாட்டுத்திடலில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது.

இன்றைய ஆட்ட நேர முடிவின் போது தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 4 விக்கட் இழப்பிற்கு 111 ஓட்டங்களைப்பெற்றுள்ளது. அஞ்சலோ மெத்திவ்ஸ் 14 ஓட்டங்களுடனும், ரொஷேன் சில்வா 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது உள்ளனர்.

முதலாவது இன்னிங்சில் ஆட்டமிழக்காது 158 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட திமுத் கருணாரத்ன இரண்டாவது இன்னிங்சில் 60 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். தனுஷ்க குணதிலக 17 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

நேற்றைய தினத்தின் இறுதி நேரத்தில் தனது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த தென்னாபிரிக்கா அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களைப்பெற்றது.

இதன்போது , தில்ருவன் பெரேரா 4 விக்கட்டுக்களையும் , லக்மால் 3 விக்கட்டுக்களையும் மற்றும் ரங்கன ஹேரத் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர். முன்னதாக தனது முதல் இன்னிங்சில் இலங்கை அணி 287 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106