மரண தண்டனையை நிறைவேற்ற இரண்டு பதவிகளுக்கு வெற்றிடம்!
Friday, July 13th, 2018
போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் மரணதண்டனையை நிறைவேற்றுபவர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மரண தண்டனையை நிறைவேற்றுபவர் தொடர்பில் இரண்டு பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் து~hர உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து இந்த பதவி வெற்றிடமாகவே காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர் இருவர் இந்த பதவிகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட போதிலும் அவர்கள் பயிற்சியின் பின்னர் பதவி விலகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தூக்கிலிடுவதற்கு பயன்படுத்தப்படும் கயிறு மற்றும் உபகரணங்கள் ஏற்கனவே சிறைச்சாலைகள் திணைக்களத்தில் காணப்படுவதாகவும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல், வியாபாரத்துடன் தொடர்புடைய 13 மரண தண்டனை குற்றவாளிகள் காணப்படுவதோடு அவர்களில் ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106