வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானம்!
Friday, July 13th, 2018
வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி பாண் உள்ளிட்ட அனைத்து வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளையும் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாளையதினம் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது இறுதி தீர்மானம் எட்டப்படும் எனவும் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்தன தெரிவித்தார்.
Related posts:
மாகாண சபைகளின் வரி வருமானம் அதிகரிப்பு!
ஆடை இறக்குமதியை நிறுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானம்!
அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு - உடுவில் மகளிர் கல்லூரி ஊடக மாணவர்கள் அறிவியல் நகர் யாழ் பல்கலை வளாகத்துக்க...
|
|
|


