வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு!
Friday, July 13th, 2018
பாண் தவிர்த்து பணிஸ், மாலு பணிஸ் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களையும் 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
எரிபொருள் விலை அதிகரிப்பு, டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் இறக்குமதி பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு ஆகிய காரணங்களினாலே விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், இந்த விலையதிகரிப்பு எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு இரத்து?
பலாலியில் விமான சேவையை ஆரம்பிக்க இந்திய நிறுவனம் விருப்பம்!
இலங்கை - இந்திய பாலம் அமைக்கும் தருணம் இது - இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா வலியுறுத்து!
|
|
|


